திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தீபாவளி அன்று அன்னபூரணியை வணங்குவதால் உண்டாகும் பலன்கள் !!

தனதிரயோதசி தொடங்கி தீபாவளி, அமாவாசை நாட்களில் காசியில் தங்கமயமாய் காட்சி தரும். அன்னபூரணியை தரிசிக்க வாழ்நாள் முழுவதும் குறையாத அன்னத்தையும் செல்வத்தை வழங்கிடுவாள்.


இந்த நாட்களில் தங்க அன்னபூரணியை தரிசிக்கவே பெரும்பாலோனோர் காசி யாத்திரை செல்கின்றனர்.
 
தீபாவளி காசி யாத்திரை: காசியில் தீபாவளியன்று அன்ன கூடம் என்ற நிகழ்வில் பலவித உணவுகள், பலகாரங்கள் வைத்து பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் லட்டு தேரில் அன்னபூரணி ஊர்வலம் வருவாள். எண்ணற்ற லட்டுகளால் உருவான தேரில் உள்ள லட்டுக்களை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள்.
 
அன்னபூரணி அவதாரம் எப்படி நிகழ்ந்தது. அவர் காசிக்கு எப்படி வந்தார் என்பதே ஒரு புராண கதையாக சொல்லப்படுகிறது. நான் முகன் என்று போற்றப்படும் பிரம்மனுக்கு முன்பு ஐந்து தலைகள் இருந்தனவாம். இதனால் கர்வம் அதிகமாக இருந்தது. பார்வதி, பரமசிவன், பிரம்மா ஆகிய மூவருக்கும் இடையேயான சிறு பிரச்சினையில் பிரம்மனின் ஒரு தலையை சிவனார் அறுத்து விட்டார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.
 
பிரம்மனின் கபாலம் சிவன் கையிலேயே ஒட்டி கொண்டது. இந்த தோஷம் நீங்க பிட்சாடனாராக சிவபெருமான் பல இடங்களில் பிச்சை பெற்றார். ஆயினும் சிவன் கையை விட்டு கபாலம் விழவில்லை. அந்த பாத்திரத்தில் எந்த பொருளும் தங்கவில்லை. அதே நேரம் பிரம்மதேவனை பார்த்து சிவனார் என நினைத்து வணங்கிய பார்வதி, தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொண்டு அன்னபூரணியாக அவதரித்து காசியில் தவம் செய்தாள்.
 
இந்த சமயத்தில்தான் பிட்சாடனாராக வந்த சிவபெருமான் அன்னபூரணியிடம் பிச்சை பெற்றார். அந்த நேரமே பிரம்மனின் கபாலம் சிவபெருமான் கையை விட்டு விலகியது. சிவனின் பசியை தீர்க்க வந்த அன்னபூரணி உலக பசிப்பிணி தீர்க்க காசியிலேயே தங்கி விட்டார் என்கிறது புராண கதை.