திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (12:33 IST)

தீபாவளிக்கு கிடா விருந்துதான்.. 5 மணி நேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் ஆட்டு சந்தையில் விற்பனை களை கட்டியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் தீபாவளியை கொண்டாட தீவிரமாக தயாராகி வருகின்றனர். புதிய ஆடைகள் எடுத்தல், பலகாரங்கள், பட்டாசுகள் வாங்குதல் என கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தீபாவளி அன்று அசைவம் சாப்பிடுவதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் தீபாவளிக்காக ஆட்டுச்சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள ஆட்டு சந்தையில் 5 மணி நேரத்திற்குள் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.