புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2024 (08:40 IST)

சென்னையில் குறும்பட இயக்குநர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை.. மாவோயிஸ்டுகளுடன் தொடர்பா?

NIA1
சென்னையில் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா என்பவருடைய வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் திடீரென என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா வீட்டில் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு என முகில் சந்திரா மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவருடைய வீட்டில் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
நக்சல்களுடனும் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முகில் சந்திரா சென்னை கொளத்தூரில் உள்ள வீட்டில் தங்கி இருக்கும் நிலையில் அவருடைய வீட்டில் தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva