1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (08:51 IST)

தனிமையில் உல்லாசமாக இருக்க அழைத்த இளம்பெண்.. ஆசையாய் போன இளைஞருக்கு நடந்த விபரீதம்!

சென்னையில் ஆன்லைன் மூலம் பழக்கமான பெண்ணை சந்திக்க சென்ற இளைஞரை மர்ம ஆசாமிகள் அடித்து பணத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞர் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு சமூக வலைதளம் மூலமாக பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். இருவரும் தொடர்ந்து பேசி வந்த நிலையில் அது காதலாக மாறியுள்ளது. இப்படியாக போய்க் கொண்டிருந்த நிலையில் ஒருநாள் அந்த பெண் தனது வீட்டில் யாரும் இல்லையென்றும், இந்நேரத்தில் வந்தால் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என்றும் இளைஞரை அழைத்துள்ளார்.

பெண்ணின் ஆசை வார்த்தையில் மயங்கிய இளைஞர் அவரை சந்திக்க எம்.ஜி.ஆர் நகரில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு பெண்ணுடன் மேலும் இரண்டு ஆண்களும் இருந்துள்ளனர். அவர்கள் விக்னேஸ்வரனை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்த பணம், செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டுள்ளனர். மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
தன்னிடம் பணம் இல்லையென்று அவர் கெஞ்சவே பிறகு விடுவித்துள்ளனர்.



அவர்களிடமிருந்து தப்பி சென்ற விக்னேஸ்வரன் நேராக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்த போலீஸார் அந்த வீட்டிற்கு சென்று அந்த பெண்ணையும், இரண்டு ஆண்களையும் கைது செய்தனர். விசாரணையில், அந்த பெண் அழகான வேறு பெண்களின் புகைப்படங்களை வைத்து சமூக வலைதளங்களில் இதுபோல பல ஆண்களிடம் ஆசை வார்த்தை கூறி பேசி ஏமாற்றி வர செய்வதும், அந்த நபர்களை அடித்து பணம் பறிப்பதையும் வேலையாக செய்து வந்தது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Edit by Prasanth.K