வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 22 ஜூலை 2020 (16:35 IST)

மாநிலங்களவை அதிமுக எம்பிக்கள் இன்று பதவியேற்பு! திமுகவினர் மிஸ்ஸிங்

மாநிலங்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக ஆதரவு எம்பிக்கள் மூன்று பேரும் இன்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் பதவியேற்றுக் கொண்டனர்.

சமீபத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தல்களில் 20 மாநிலங்களில் இருந்து 61 பேர் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் அதிமுக சார்பாக கே பி முனுசாமி, தம்பி துரை மற்றும் த மா க தலைவர் ஜி கே வாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கொரோனா காரணமாக இவர்களின் பதவியேற்பு தாமதமாகி வந்த நிலையில் இன்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் அவர்கள் மூன்று பேரும் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகிய மூன்று பேரும் இன்று பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.