அடுத்த இரண்டு நாட்களுக்கு செம மழை! – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, சேலம், கோவை மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாளை மேற்கு தமிழக மாவட்டங்களான சென்னை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கன்னியாக்குமரி, தென்காசி, கிருஷ்னகிரி, வேலூர், நாமக்கல் ஆகிய பகுதிகளில் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.