வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (15:32 IST)

போத்தனூர் ரயில்வே பணிமனை மூடல்!

போத்தனூர் ரயில்வே பணிமனை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரயில்வே பணிமனை மூடப்பட்டுள்ளது. 
 
கோவை போத்தனூர் இரயில்வே பணிமனையில் பணிபுரியும் ஸ்ரீ ராம் நகர் பகுதியை சேர்ந்த 42 வயது ஊழியருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதை அடுத்து ரயில்வே பணிமனை மூடப்பட்டது.
 
இன்றும் நாளையும் ரயில்வே பணிமனைக்கு நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு சமிக்சை மற்றும் தொலை தொடர்பு துறையில் பணிபுரியும் ஊழியர் காய்ச்சலால் அவதிபட்டு வந்தார்.
 
இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
மேலும் இவருடன் பணியாற்றிய 15 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளது. இவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.