ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 அக்டோபர் 2024 (11:46 IST)

ஆயுத பூஜை விடுமுறை.. சென்னையில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள்.. முழு விவரங்கள்..!

ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக 2000 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மூன்று நாட்களுக்கும் விடுமுறை கிடைக்கிறது. தொடர் விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து 2092 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் பத்தாம் தேதி மட்டும் 2000 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. எனவே நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடியவர்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது


Edited by Siva