வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 8 அக்டோபர் 2024 (11:45 IST)

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் மது ஒழிப்பு மாநாடு: திருமாவளவன்

தமிழகத்தில் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது போல, தென்னிந்தியாவில் உள்ள ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளோம் என்றும், இது குறித்து வரும் 10ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் கூட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மறைந்த ராஜாஜியின் நிலைப்பாடுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவரது மதுவிலக்கு போராட்டம் வரவேற்கக் கூடியது என்றும், அகில இந்திய அளவில் மதுவிலக்கு திட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியவர் ராஜாஜி என்பது மறக்க முடியாத உண்மை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது போல, தென்னிந்திய முழுவதும் நடத்த இருப்பதாகவும், இந்த மாநாட்டிற்கும் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.


Edited by Mahendran