செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

10 நிமிட டெலிவரி குறித்து ஜொமைட்டா நிறுவனம் விளக்கம்!

சமீபத்தில் ஜொமைட்டா நிறுவனம் ஆர்டர் செய்யும் உணவுகள் பத்து நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
 இதனை அடுத்து சென்னை போக்குவரத்து காவல்துறை இது குறித்து விளக்கமளித்த ஜொமைட்டா நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நிலையில் இதுகுறித்து ஜமைக்கா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது
 
பத்து நிமிடம் உணவு டெலிவரி என்ற திட்டம் சென்னையில் இப்போதைக்கு அறிமுகப்படுத்தப்படாது என சென்னை காவல் துறையிடம் ஜொமைட்டா விளக்கம் அளித்துள்ளது 
 
எந்த திட்டமாக இருந்தாலும் காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் முறையான அறிவிப்பு பின்னரே செயல்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது