ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 24 மார்ச் 2022 (14:22 IST)

10 நிமிடத்தில் எப்படி சாத்தியம் ? Zomato நிறுவனத்திடம் விளக்கம் கேட்கும் காவல்துறை!

10 நிமிடத்தில் எப்படி சாத்தியம் ? Zomato நிறுவனத்திடம் விளக்கம் கேட்கும் காவல்துறை!
சென்னையில் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்போவதாக அறிவித்துள்ள Zomato நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது. 
 
10 நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்கப்படும் என சொமோட்டோ நிறுவனம் அண்மையில் அறிவித்தது. 
 
இந்த அறிவிப்பானது உணவு தரமின்மை, போக்குவரத்து விதிமீறல், விபத்து மற்றும் ஊழியர்கள் துன்புறுத்தல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என பரவலாக எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் சொமோட்டோவின் அறிவிப்பு தொடர்பாக அந்நிறுவனத்திடம் சென்னை காவல் துறை விளக்கம் கேட்டுள்ளது.