வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (09:01 IST)

'Zomato Instant' 10 நிமிடங்களில் உணவு டெலிவரி - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் இனி 10 நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் விரைவில் தொடங்கும் என்று ட்வீட் செய்துள்ளார்.

 
Zomato நிறுவனத்தின் சராசரி டெலிவரி நேரம் 30 நிமிடங்கள் என்பதால் இதனை குறைக்க வேண்டி இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் இனி 10 நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார். 
 
அதோடு உணவின் தரம் – 10/10, டெலிவரி செய்யும் நபரின் பாதுகாப்பு – 10/10 மற்றும் டெலிவரி நேரம் – 10 நிமிடங்கள் என அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானது முதலே நெட்டிசன்கள் மீம் மூலம் இதனை கலாய்த்து வருகின்றனர். இதனால் #Zomato டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.