வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (21:38 IST)

கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் நீக்கம்!

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் என்பவர் திடீரென நீக்கம் செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் போஸ்டர் அடித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் போஸ்டர் அடித்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது  
 
சமீபத்தில் சசிகலாவை சந்திக்க யுவராஜ் முயற்சி செய்ததாகவும் ஆனால் சசிகலா தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் சந்திக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவை சந்திக்க முயற்சித்த யுவராஜ் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது