செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (12:43 IST)

ஒரு செங்கல கூட நடல... அதிமுகவை விளாசிய ஸ்டாலின் !

முதலமைச்சர் அமைச்சர்கள் மீது கொடுத்த ஊழல் புகார்கள் மீதும், 7 பேர் விடுதலை தொடர்பாகவும் எவ்வித நடவடிக்கை எடுக்காத ஆளுநர் செயலை  கண்டித்து கூட்டத்தை தொடரை  முழுவதும் புறக்கணிப்பதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 
 
2021 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் உரையுடன் காலை 11 மணிக்கு தொடங்கியது.  ஆளுநர் உரை நிகழ்த்த தொடங்கியும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன் ஆகியோர் அரசு மீதான ஊழல் புகார்கள், ஏழு பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச முற்பட்டனர். ஆனால் தொடர்ந்து ஆளுநர் பேச அனுமதிக்கவில்லை. அதோடு மத்திய அரசு தமிழகத்திற்கு பட்ஜெட்டில் 1 லட்சம்  கோடி அனுமதி இருக்கிறது என்று பதில் அளித்தார். எதிர்கட்சி தலைவர் தொடர்ந்து பேச முற்பட்டும் அனுமதி மறுக்கப்பட்டால் எதிர்கட்சியினர்  ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், திமுக சார்பாக முதலமைச்சர், துணைமுதலமைச்சர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக 97 பக்க அறிக்கையை ஆளுநரிடம் அளித்தோம். மேலும் 7 பேர் விடுதலை தொடர்பாகவும் ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஆளுநர் செயலை கண்டித்து  உரையை புறக்கணிப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
 
மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு கொடுத்த லாலிப்பாப் என்று நான் ஏற்கனவே விமர்சனம் செய்துள்ளேன். இந்த நிலையில் ஆளுநர் மத்திய அரசு தமிழகத்திற்கு 1 லட்சம் கோடி ஒதுக்கியதாக ஆளுநர் தெரிவிக்கிறார். ஆனால் 2015 ஆண்டு பட்ஜெட்டில்  மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியாகியது. 2019 பிரதமர் மோடி  மதுரையில் எய்ம்ஸ்  மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி நாடகம் நடத்தினார். ஆனால் 2021 வந்ததும்  இதுவரை ஒரு செங்கலை கூட நடவில்லை  என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
 
பெட்ரோல், டீசல், கேஸ் என அனைத்து விலை யும் உயர்த்து உள்ளது ,இது விலைவாசி விஷயம் போல் ஏறி உள்ளது. ஆளுநர் இது கடைசி பட்ஜெட் என்று ஆவரே தெரிவித்தார். அதை உளமார  வரவேற்பதாக தெரிவித்தார்.
 
பேரவையில் தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்தும் , ஊழல்  குறித்து பேச வாய்ப்பு தர போவதில்லை,எந்த நடவடிக்கையும் எடுக்க போவது  இல்லை என்றார். அதனால்  நாங்கள் மக்கள் மன்றத்தில்  போய்விட்டோம் என்றார் என்றார். மேலும் ஆளுநர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பக்கபலமாக இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.