புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (12:31 IST)

திமுக தீய சக்தி, அவர்கள் ஆட்சிக்கு வருவதை அனுமதிக்க மாட்டோம்: டிடிவி தினகரன்

திமுக தீய சக்தி என்றும் திமுக ஆட்சிக்கு வருவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் டிடிவி தினகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அவர் பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சசிகலா சென்னை திரும்பியவுடன் அதிமுகவை கைப்பற்றுவாரா? அல்லது அதிமுக-அமமுக இணைப்பில் ஈடுபடுவாரா? என்பது புரியாத புதிராக உள்ளது
 
இந்த நிலையில் சற்றுமுன் பேட்டியளித்த டிடிவி தினகரன் ’திமுக பத்து வருடமாக இலவு காத்த கிளிபோல் ஆட்சியைப் பிடிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் திமுக ஒரு தீய சக்தி என்றும் திமுக தலைகீழாக நின்றாலும் அவர்கள் ஆட்சிக்கு வருவதை அம்மாவின் தொண்டர்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
அவரின் இந்த பேட்டியிலிருந்து திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அதிமுகவுடன் அமமுக சமரசம் செய்து கொள்ள தயார் என்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்