வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2019 (12:50 IST)

வெட்கமா இல்ல... அடிச்சு பிரச்சனை ஆனதும் ராக்கியா? கஸ்தூரி டிவிட்!

நரோடா தொகுதி பாஜக எம்.எல்.ஏ பால்ராம் தவாணி நடுரோட்டில் பெண்ணை அடித்து சர்ச்சை ஆகியதற்கு கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
அகமதாபாத்தில் நரோடா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பால்ராம் தவாணியிடம் தண்ணீர் பற்றாக்குறை பற்றி புகார் கூற வந்த போது அந்த பெண்ணை பால்ராம் தவாணியும், அவனது ஆட்களும் நடுரோட்டில் வைத்து அடித்துள்ளனர். 
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று தீயாக பரவியதையடுத்து கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எனவே, இது குறித்து விளக்கம் அளிக்க அப்பெண்ணுடன் சேர்ந்து பிரஸ்மீட்டில் கலந்துக்கொண்டார். 
 
அப்போது அப்பெண்ணின் தலையில் கை வைத்து நான் இவரை இனி அடிக்க மாட்டேன். அடித்தது தவறுதான். இவர் எனக்கு சகோதரி போன்றவர். எங்களுக்குள் சரியான புரிதல் இல்லாமல் இது நடந்து விட்டது என்று கூறினார்.
அதோடு அந்த பெண்ணிடம் ராக்கி கொடுத்து தனக்கு கட்டுமாறு கேட்டுக்கொண்டு ராக்கி கட்டிக்கொண்டார். தற்போது இந்த செயலை நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
 
கஸ்தூரி பதிவிட்டதாவது, இதை நம்பவே முடியலை. இது பாஜக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. நாடு முழுவதும் இதுபோன்ற கொடூர புத்தி படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கத்தான் செய்கிறார்கள். வெட்கம் கெட்ட பல்ராம் தவானி. அந்தப் பெண் மன்னித்தது அவரது பெருந்தன்மை. ஆனால் ராக்கியெல்லாம் கட்டுவது.. சகிக்க முடியலை என பதிவிட்டுள்ளார்.