1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. H.Raja gets trolles in twitter for his post on Vaiko

இவரு சிந்தனை சிற்பி.. சைனடு குப்பி.. காலையிலேயே நெட்டிசன்களிடம் சிக்கிய எச்.ராஜா!

எச்.ராஜா
வைகோவின் கருத்தை விமர்சனம் செய்து டிவிட்டரில் பதிவிட்ட எச்.ராஜாவை டிவிட்டர் வாசிகள் கலாய்த்து வருகின்றனர். 
 
நேற்று கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட வைகோ, அரசியல்சாசனத்தையே தீயிட்டு கொளுத்தியவர்கள் இந்த திராவிடர் இயக்கத்தினர் என்றும், அதைபோல் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருவுக்கு தெரு நாற்சந்தி முச்சந்தியில் தீயிட்டு கொளுத்துவோம் என்றும் சூளுரைத்தார்.
 
கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கையை திருத்திவிட்டதாக மத்திய அரசு கூறுவதாகவும், ஆனால் அது அப்பட்டமான ஏமாற்று வேலை என்றும், மும்மொழித் திட்டம் என்று அந்த வரைவு அறிக்கையில் இன்னமும் இருப்பதை பார்த்து தமிழர்கள் ஏமாந்துவிடமாட்டோம் என்றும் கூறினார்.
வைகோவின் இந்த கருத்தை, ஆக்கப்பூர்வமான சிந்தனை அற்ற
நபர் என பதிவிட்டு விமர்சித்துள்ளார். இதனை கண்ட டிவிட்டர் வாசிகள் சகட்டு மேனிக்கு எச்.ராஜாவை கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சில இதோ... 

அடுத்த கட்டுரையில்
இந்தி ஒரு கலப்பு மொழி: கொந்தளிப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகரின் கருத்து