புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 ஜூன் 2019 (13:32 IST)

மாநிலங்களவையில் சீட் கேட்கும் பாஜக: பிடி கொடுக்குமா அதிமுக?

தமிழகத்தில் மாநிலங்களவையில் உறுப்பினர் பதவியில் ஒரு இடத்தை தருமாறு பாஜக அதிமுகவிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அடுத்த மாதம் 24 ஆம் தேதியோடு தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவி காலம் முடிய உள்ள நிலையில், விரைவில் உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் இரு கட்சியும் தலா 3 எம்பிக்களை தேர்வு செய்யலாம். 
 
இந்நிலையில் பாஜக அதிமுகவிடம் ஒரு இடம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடிப்படையாக கொண்டு கணக்குபோட்டால், உள்ள 3 இடங்களில் பாஜகவுக்கு ஒன்று, பாமகவுக்கு ஒன்று, அதிமுகவிற்கு ஒன்று என்றுதான் பிரிக்க முடியும். 
 
ஆனால், அப்படி செய்தால் நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் குறைந்துவிடும். எனவே, பாஜகவின் கோரிக்கை மீது தீவிர பரிசீலனையில் உள்ளதாம் அதிமுக. ஏற்கனவே அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் கொடுக்காத்தால் அதிருப்தியில் உள்ள அதிமுக முக்கிய தலைகள் இந்த விஷயத்தை எப்படி கையாளும் என்பதும் தெரியவில்லை.