ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (08:34 IST)

கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருவுக்கு தெரு தீ வைப்போம்: வைகோ ஆவேசம்

புதிய கல்விக்கொள்கை குறித்த கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை தெருவுக்கு தெரு நாற்சந்தி, முச்சந்தியில் தீயிட்டு கொளுத்துவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.
 
நேற்று கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட வைகோ, 'அரசியல்சாசனத்தையே தீயிட்டு கொளுத்தியவர்கள் இந்த திராவிடர் இயக்கத்தினர் என்றும், அதைபோல் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருவுக்கு தெரு நாற்சந்தி முச்சந்தியில் தீயிட்டு கொளுத்துவோம் என்றும் சூளுரைத்தார்.
 
கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கையை திருத்திவிட்டதாக மத்திய அரசு கூறுவதாகவும், ஆனால் அது அப்பட்டமான ஏமாற்று வேலை என்றும், மும்மொழித் திட்டம் என்று அந்த வரைவு அறிக்கையில் இன்னமும் இருப்பதை பார்த்து தமிழர்கள் ஏமாந்துவிடமாட்டோம் என்றும் கூறினார்.
 
இந்திய ராணுவத்தின் முன் மார்பை காட்டி உயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை வீண்போகும்படி விட மாட்டோம்' என்றும், திராவிடக் கட்சிகளோடு மோதி பா.ஜ.கவின் மூக்கு உடைபட்டுள்ளது என்றும் வைகோ பேசினார்