வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 ஜூன் 2019 (12:01 IST)

நடுரோட்டில் பெண்ணை அடித்த பாஜக எம்.எல்.ஏ – வைரலாகும் வீடியோ

அகமதாபாத்தில் நரோடா தொகுதி பாஜக எம்.எல்.ஏ பால்ராம் தவாணி நடுரோட்டில் ஒரு பெண்ணை அடித்து எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

நரோடா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பால்ராம் தவாணியிடம் தண்ணீர் பற்றாக்குறை பற்றி புகார் கூற வந்துள்ளார். அந்த பெண்ணை பால்ராம் தவாணியும், அவனது ஆட்களும் நடுரோட்டில் வைத்து அடிப்பதையும், உதைப்பதையும் அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த குஜராத் மாநிலத்தின் சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி “இந்த சம்பவம் குறித்து காவலர்கள் பால்ராம் மற்றும் அவரது குழுவினரை கைது செய்யவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.