1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. youtuber manish kashyab case rejected

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட வீடியோ வழக்கு ரத்து: மதுரை ஐகோர்ட் உத்தரவு

வடமாநிலம்
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானது அடுத்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட் அறிவித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. 
 
இந்த வீடியோ போலியானது என்று அந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் மணிஷ் காஷ்யப் என்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கு இன்று ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. காவல்துறை உரிய விதிமுறைகளை பின்பற்றி மனுதாரரை கைது செய்யவில்லை என்று ஹைகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி