ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களுக்கு எதிராக தமிழக அரசு தொடந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என் ரவி காலதாமதம் செய்து வருவதாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது,.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குறிப்பிட்ட காலவரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதலை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இரு ரிட் மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஆளுநர் ஏற்படுத்துவதாகவும் மற்றொரு மனதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பிக்குமா அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Edited by Siva