வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2023 (15:38 IST)

தொடர் கனமழை எதிரொலி: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை..!

Sathuragiri Hills
கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதை அடுத்து சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தொடர் கன மழை காரணமாக சதுரகிரி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் தாணிபாறை வனத்துறை கேட்டின் முன்பு சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் திரும்பி வருகின்றார்கள்.  இருப்பினும் மழை குறைந்த உடன் மீண்டும் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva