வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2023 (09:55 IST)

மாயா மேல் வழக்கு தொடர்ந்த விசித்திரா! ப்ரதீப்புக்கு அநீதியா? – இன்று கூடும் பிக்பாஸ் நீதிமன்றம்!

Biggboss
பிக்பாஸ் வீட்டில் மாயா கேங் மீது விசித்திரா தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில் இன்று பிக்பாஸ் நீதிமன்றத்தில் மாயா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.



பிக்பாஸ் சீசன் 7ல் இருந்து ப்ரதீப் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒரு வாரம் ஆகியும் அதன் சூடு குறையாமல் உள்ளது. பிக்பாஸ் வீட்டில் என்னதான் பல டாஸ்க்குகள் நடந்தாலும் ப்ரதீப்பை வெளியேற்றியது சரியில்லை என சொல்லும் விசித்திரா, அர்ச்சனாவுக்கு எதிராக மாயா அண்ட் கோ செய்து வரும் சண்டைதான் தினசரி ஹைலைட்டாக இருந்து வருகிறது.

இதனால் கடுப்பான மாயா தனது கேப்டன் பதவியை மறந்து தனிப்பட்ட பிரச்சினைகளை காரணமாக வைத்து விசித்திரா, அர்ச்சனாவுக்கு தொடர்ந்து பல தொல்லைகளை அளித்து வருகிறார். இந்நிலையில் இன்று கூடும் பிக்பாஸ் நீதிமன்றத்தில் மாயாவின் கேப்டன்ஷிப் சரியில்லை, மோசமாக நடத்துகிறார் என விசித்திரா வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் இந்த நீதிமன்ற விவாதத்தில் ப்ரதீப் வெளியேற்றப்பட்டது குறித்த விவாதங்கள் எழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K