தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
- பாம்பை தன் தோளில் போட்டுக்கொண்டு டாஸ்மாக் வந்த முதியவர்
- விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலி: தமிழ்நாடு அரசிடம் அறிக்கை கேட்ட ஆளுனர் ஆர்.என்.ரவி
- ஜோடி சூப்பருப்பா... பிரபல யூடியூபர் இர்ஃபானின் திருமண புகைப்படங்கள் வைரல்!
- சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
யூடியூபர் இர்பானின் கார் மோதி விபத்து- ஆர்.டி.ஓ பரிசோதனையில் சிக்கல்
யூடியூபர் இர்பானின் சொகுசு காரை செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்ற போலீசார், உரிய ஆவணங்களை வழங்காததால் திருப்பி அனுப்பியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் பிரபல யூடியூபர் கார் மோதி பத்மாவதி என்ற 55 வயது பெண் ஒருவர் பலியானார். இந்த காரை அவரது மைத்துனர் அசாருதீன் ஓட்டியதால் அவர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சிசிடிவி காட்சியின் மூலம் விபத்துக்குள்ளான காரில் இர்பான் பயணம் செய்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் விபத்து தொடர்பாக கார் ஓட்டுனர் அசாருதீன் மீது மட்டும் 304 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யூடியூபர் இர்பான் மீது தற்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய யூடியூபர் இர்பானின் சொகுசு காரை செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்ற போலீசார், உரிய ஆவணங்களை வழங்காததால் திருப்பி அனுப்பியுள்ளனர்.
