ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 20 மே 2023 (22:09 IST)

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

corono
தமிழகத்தில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் பற்றிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் இன்று 13 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில், ஆண்கள் 9 பேர் என்றும், பெண்கள் 4 பேர் என்றும் கூறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா 2 பேரும், வெளிநாட்டு பயணி ஒருவர்  உள்பட மொத்தம் 9 மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,  கொரொனா பாதிப்பில் இருந்து  நேற்று 42 பேர் குணமடைந்ததாகவும், கொரொனாவால் பாதிக்கப்பட்டு 113 பேர் சிகிச்சை பெறுவதாகவும், கொரொனா தொற்றால் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.