1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. youth killed old man in running bus

சென்னை பேருந்தில் முதியவர் அடித்துக்கொலை!.. இளைஞர் கைது..

murder
பேருந்தில் வழி கேட்டது தொடர்பாக முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே வசித்து வந்தவர் சந்திரசேகரன்(74). இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர் நேற்று தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து வடபழனிக்கு செல்வதற்காக 70ஜி அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத்(24) என்கிற வாலிபர் பேருந்தில் எல்.இ. டி திரையில் ஓடிக்கொண்டே வழித்தட விபரங்கள் பற்றி சந்திரசேகரிடம் சில கேள்விகளை கேட்டிருக்கிறார்..

அப்போது ‘நான் ஏன் உனக்கு இதையெல்லாம் சொல்ல வேண்டும்?’ என சந்திரசேகரன் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதனால் ஆத்திரமடைந்த அமர்நாத் சந்திரசேகரன் கழுத்தை இறுக்கி பிடித்து முதுகில் ஓங்கி குத்தியிருக்கிறார். இதனால் சந்திரசேகர் மயக்கமடைந்தார். அதன் அடுத்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

முதியவரை தாக்கியதோடு,  டுக்க வந்த ஓட்டுனரையும் தாக்கிவிட்டு தப்ப முயன்ற அமர்நாத்தை சக பயணிகள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அமர்நாத்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்திருக்கிறார்கள். போலீசாரின் விசாரணையில் குற்றவாளி அமர்நாத் ஏற்கனவே போதை மறுவாழ்வு மையத்தில் இருந்தது தெரிய வந்திருக்கிறது. எனவே போதையில் அமர்நாத் இந்த குற்றத்தை செய்தாரா என காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி - 18 பேருக்கு தீவிர சிகிச்சை!