புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (17:07 IST)

அத்தி வரதர் கோவிலில் செல்போனில் படமெடுக்க முயன்ற இளைஞர் பலி !

காஞ்புரம் அத்திவரதர் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க வந்த ஆந்திர இளைஞர் மீது போலீஸார் தாக்குதல் நடத்துயதில் அவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திர மாநில இளைஞர் காஞ்சி வரதராஜர் கோவிலில் உள்ள தங்கப்பல்லியை செல்போனில் படம் பிடித்த போது, பெண் காவலர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பெண் போலீஸ் தாக்கியதால் இளைஞர் சக்தி ஆகாஷ் கிழே  விழுந்து உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
சக்தி ஆகாஷ் ,காஞ்சி அத்தி வரதர் கோவிலில் உள்ள தங்கப்பல்லியை செல்போனில் படம் பிடிக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ், தாக்கியதாக இறந்ததாக அவரது  பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.