போதையில் வாகனம் ஓட்டியவரால் விபத்து : அநாதையான குழந்தை ...

accident
Last Modified செவ்வாய், 2 ஜூலை 2019 (17:58 IST)
கோரிக்கடவு பகுதியில் வசிக்கும் விவசாயி பகவதி. இவர் தனது மகனுக்கு  காதணி விழா நடத்த எண்ணியிருந்தார்.   இதற்காக அழைப்பிதழை தனது  உறவினர்களுக்கு வழங்குவதற்காக தனது மனைவி விஜயா மற்றும் லட்சுமி ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கரவாகனத்தில் சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து பகவதி வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பகவதி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சரக்கு வாகன ஓட்டுநரை கைது செய்தனர். வாகன ஓட்டி குடிபோதையில் வாகனத்தை இயக்கிவந்தது தெரிந்தது.
 
இன்னும் இரண்டு நாட்களே காதணி விழாவுக்கு உள்ளநிலையில், பெற்றோர் விபத்தில் பலியாகி குழந்தை அநாதையான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :