புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 ஜூன் 2019 (19:51 IST)

கழிப்பறையில் மதுகுடிக்கும் பெண்கள் : இது எங்கபோய் முடியுமோ ? பரவலாகும் வீடியோ

சென்னையை சேர்ந்த இரு  பெண்கள் கழிவறையில் நின்றவாறு மதுகுடிக்கும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெகுவாகப் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கு இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் இளம்வயதிலேயே படிக்கும் மாணவர்கள் முதற்கொண்டு பலரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிவருவதாக பலரும் தெரிவித்து, மதுப்பானக் கடைக்கு எதிராகக் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில், மதுகுடித்துவிட்டு இரு பெண்கள் போதையில் தள்ளாடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.  அந்த வீடியோவில் இரண்டு பெண்கள், கழிப்பறைக்குச் சென்று மதுபாட்டிலை திறந்து மதுவருந்துகின்றனர்.
 
இந்த வீடியோவைப் பார்க்கும் போது, இரு பெண்களும் முதன்முதலாக மருந்துவது போன்று தெரிகிறது. என்ன இருந்தாலும் கலாச்சார சீரழிவையும்,சமுதாயக் கேட்டை உண்டாக்கும் மதுவை பெண்கள் குடிப்பதுதான் பெரும்பானவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.