வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (13:59 IST)

70 ரூபாய் தகராறில் கைக்குழந்தை அடித்துக் கொலை! பகீர் சம்பவம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள அலகரை கல்லுப்பட்டியில் உள்ள வடக்கு கரையில் வசிப்பவர் ரெங்கர். இவர் அங்குள்ள பகுதிகளில் கூலி வேலை செய்துவருகிறார். இவர் நேற்று முந்தினம் தனது கைக்குழந்தையை (நித்தீஸ்வரன்) தூக்கிக் கையில் வைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து அங்கு வந்த ரெங்கரின் உறவினரான செந்தில் என்பவர், ரெங்கரின் சட்டைபாக்கெட்டில் கையை விட்டு ரூ. 70 எடுத்ததாகத் தெரிகிறது. இதனால் ரெங்கர் கோபம் கொண்டு அவரைத் திட்டியுள்ளார். பதிலுக்கு செந்திலும், எதோ பேசியுள்ளார். அதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது.
 
அப்போது அருகில் இருந்த மூங்கில் கம்பை எடுத்து, ரெங்கர் மற்றும் அவரது பச்சிளம் குழந்தையைத் தாக்கினார். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் குழந்தை நித்தீஸ்வரன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தான். இதுகுறித்து ரெங்கர் போலீஸில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் செந்திலைக் கைது செய்து விசாரித்துவருகின்றனர். வெறும் 70 ரூபாய்க்காகப் பச்சைக்குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் உள்ளா எல்லோரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.