திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (16:32 IST)

மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டிய இளைஞர்கள் கைது

sivagangai
சிவகங்கையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் என சிலர் பைக் ரேசிலும், ஸ்டண்ட் எனப்படும் சாகசத்தில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்துள்ளது. இதுபற்றி காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும் ஒரு சிலர் மக்களுக்கு இடையுறு மற்றும் அச்சம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

அண்மையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிச் சென்ற யூடியூபர்களான டிடிஎஃப் வாசன், ஐதராபாத்தைச் சேர்ந்த யூடியூபர் கோட்லா உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், இரவு  நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய இரண்டு இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edited by Sinoj