ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 3 அக்டோபர் 2022 (14:24 IST)

பைக் சாகசம் செய்த அதே இடத்தில் வாகன விழிப்புணர்வில் ஈடுபடும் யூடியூபர்

binoy
தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் என சிலர் பைக் ரேசிலும், ஸ்டண்ட் எனப்படும் சாகசத்தில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்துள்ளது. இதுபற்றி காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும் ஒரு சிலர் மக்களுக்கு இடையுறு மற்றும் அச்சம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் சென்னை, அண்ணாசலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் கோட்லா பினோய்யின் மீது வழக்குப் பதிவு செய்து,  வாகனத்தையும் பறிமுதல் செய்து, இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த பினோய் சில நாட்களுக்கு முன் சென்னை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.


இவ்வழக்கை  இன்று விசாரித்த, நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, திங்கட்கிழமை மட்டும் காலை 9:30 மணி முதல்  10:30 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரையிலும் பைக் ஸ்டண்ட் செய்த அதே இடத்தில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, பிரசுரங்கள் வழங்க வேண்டும்; செவ்வாய் கிழமை முதல் சனிகிழமை வரை காலை 8 மணி முதல் 12 மணி ராஜிவ்காந்தி மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj