61 வயது பாட்டி கற்பழித்து கொலை: சிக்கிய 21 வயது இளைஞர்

Last Updated: வியாழன், 8 நவம்பர் 2018 (17:59 IST)
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாகி வருகிறது. வயது வித்தியாசம் இன்றி பெண்களை அற்ப இச்சைக்காக பலாத்காரம் செய்து கொல்வது மிக சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. 
 
அந்த வரிசையில், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேல வடபாதியை சேர்ந்த 61 வயது மூதாட்டி கடந்த மாதம் முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், அவரது உடல் ரயில்வே கேட் பகுதியில் கிடைத்தது. 
 
61 வயது மூதாட்டி ரயில்வே கேட் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டு கிடந்தது போலீஸாரின் அடுத்த கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கின் குற்றவாலி யார் என போலீஸார் விசாரித்து வந்தனர். 
 
இந்நிலையில், பாட்டியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தததாக ஒப்புக்கொண்டு, 21 வயது இளைஞர் ஒருவர் சரண்டைந்தான். இதைனை அடுத்து போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :