வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 நவம்பர் 2018 (16:17 IST)

அக்னிப்பரிட்சைக்கு பிறகு கற்பை சோதிப்பதா? மாணவர்களுக்கு கமல் பதில்

அக்னிப்பரிட்சைக்கு பிறகு கற்பை சோதிப்பதா? மாணவர்களுக்கு கமல் பதில்
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் களமிறங்கும் பொருட்டு மக்கள் நீதி மய்யம் என்ர கட்சியை துவங்கி மக்களுடன் அதிக கலந்துரையாடலை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் மாணவர்களுடனான சந்திப்பில் பங்கேற்றார். 
 
இந்த சந்திப்பின் போது மாணவர்கள் பலர் தங்களது கேள்விகளை முன்வைத்தனர். அப்போது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதற்கென ஒரு தேர்வு உள்ளது, ஆனால் அரசியலில் பொறுப்புக்கு வருபவர்கள் பிரபலமான நபராக இருந்து சிஎம் ஆகிவிடுகிறார்கள்? அவர்களும் ஏதாவது தேர்வு எழுதவேண்டும் அல்லவா? என கேட்டதற்கு பின்வருமாறு பதில் அளித்தார். 
 
சரியான கேள்வி, அந்த தேர்வுக்கான கேள்வித்தாளைத்தான் நான் தயார் செய்து பதில் சொல்லி கொண்டிருக்கிறேன். வேறு யாரும் இதைச் செய்கிறார்களா? எனக்கு தெரியாது. 
 
தைரியமாக கூட்டத்தில் வந்து கேள்வி கேளுங்கள் என்று நின்று இந்த அக்னிப்பரிட்சையில் வென்ற பிறகு நீங்கள் என் கற்பை சோதிக்க முடியாது. என்னிடம் நேர்மை உள்ளது. அதுவே என் அரசியல் தகுதியாகாக நான் கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.