ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2024 (16:05 IST)

துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண் - கொலையில் திடுக்கிடும் தகவல்.! சடலத்தை 2 நாட்கள் வீட்டில் வைத்திருந்த கொலையாளி..!!

Deepa Murder
சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தை இரண்டு நாட்கள் வீட்டில் வைத்திருந்ததாக கைதான கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
சென்னை துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள்,  துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துரைப்பாக்கம் போலீசார், ரத்தக் கறைகளுடன் இருந்த சூட்கேஸைத் திறந்து பார்த்த போது, பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
 
மேலும் சம்பவ இடத்தில் காவல் இணை ஆணையர் மற்றும் அடையாறு துணை ஆணையர் ஆய்வு செய்தனர். அது மட்டுமல்லாமல், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த உடல் பாகங்களில் உள்ள அடையாளங்களை வைத்து உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 
 
விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டது சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் என்பதும், அவரது பெயர் தீபா என்பது தெரியவந்தது. பின்னர் சந்தேகத்தின் பேரில் சிவகங்ககையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
கொலை செய்யப்பட்ட தீபா பாலியல் தொழில் செய்து வந்ததாகவும், தனக்கும் தீபாவுக்கு பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை ஏற்பட்டதாகவும், இந்த பிரச்னை முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன், தீபாவை சுத்தியால் அடித்து கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

 
மேலும், கொலை செய்து விட்டு சடலத்தை 2 நாட்கள் தன் வீட்டில் வைத்திருந்ததாகவும், சூடகேஸை ஆர்டர் செய்து வாங்கி, அதில் சடலத்தை வைத்து யாருக்கும் தெரியாமல் சாலையில் வீசியதாகவும் கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.  இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.