ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 27 டிசம்பர் 2023 (13:50 IST)

திருமணம் ஆகாததால் நகைகளை கொள்ளையடித்தேன்: தஞ்சை கொள்ளையன் அதிர்ச்சி வாக்குமூலம்..!

Robbery
தனக்கு நீண்ட காலமாக திருமணமாகவில்லை என்றும் நகைகளை கொடுத்தால் திருமணம் செய்ய பெண்கள் முன் வருவார்கள் என்பதால் நகைகளை கொள்ளை அடித்ததாகவும் நகை கொள்ளையன் வாக்குமூலம் அளித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தஞ்சாவூரை சேர்ந்த கீதா என்ற அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் கதவு உடைக்கப்பட்டு 48 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் கொள்ளை அடிக்க பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறை தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர். இந்த நிலையில்  150கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையனை அடையாளம் கண்ட போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். 
 
இதனை அடுத்து அந்த கொள்ளையனின் பெயர் வெங்கடேசன் என்றும், அவருக்கு 33 வயது என்றும் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் வெங்கடேசன் வாக்குமூலம் கூறிய போது ’தனக்கு யாரும் பெண் தரவில்லை என்றும் அதனால் விரக்தி அடைந்து பெண்ணுக்கு தானே நகை போட்டால் பெண் தருவார்கள் என்று நினைத்து கொள்ளையடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.  அவரது இந்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran