செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (16:15 IST)

2018ம் ஆண்டே போதை பொருள் கடத்திய ஜாபர் சாதிக்..! கூட்டாளி அதிர்ச்சி வாக்குமூலம்..!!

Jafar Sadiq
2018ம் ஆண்டே ரூ. 25 கோடி மதிப்பிலான போதைப் பொருளை ஜாபர் சாதிக் கடத்தியதாக அவரது கூட்டாளி சதா, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில்  தெரிவித்துள்ளார்.
 
போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக், டெல்லியில் பதுங்கியிருந்தபோது சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் மெகா பின்னணி வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 3 ஆயிரத்து 500 கிலோ போதைப்பொருள் தயாரிப்புக்கான மெதம்பெடமைன் மூலப் பொருளை, சர்வதேச நாடுகளுக்கு கடத்திய ஜாபர் சாதிக், கோடிக்கணக்கில் பணம் பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு இரண்டாயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர. 
 
இதனிடையே ஜாபர் சாதிக் கூட்டாளி திருச்சி சதாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செய்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
2018ம் ஆண்டே ரூ. 25 கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஜாபர் சாதிக் கடத்தியதாக அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். 2019ம் ஆண்டு ரூ.1.3 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் அம்பலமானது.

 
மேலும் ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா,  அளித்த தகவலின் பேரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் குடோனில் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.