செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (16:06 IST)

இளைஞர் ரூ. 1800 கடன் பிரச்சனையால் கொலை

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பகுதியில் ரூ. 1800 கடனுக்காக வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
கோபிச்செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்  செந்தில் குமார். இவர்  கார் ஓட்டுநராக உள்ளார். இவர் தன் வீட்டினருகே வசிக்கும் சின்ராஜ் என்பவருக்கு ரூ. 1800 கடன் கொடுத்துள்ளார். 
 
இதனையடுத்து பலநாட்கள் கழித்து சின்ராஜிடன் தான் கொடுத்த ரூ. 1800 பணத்தை திருப்ப கேட்டுள்ளார். பின்னர் சின்ராஜுக்கும், செந்தில் குமாருகும், இடையே வாக்குவாதம் எழுந்து இருவரும் சண்டை இட்டுக்கொண்டனர்.
 
இந்நிலையில் இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த சின்ராஜ் தன்னை அவமானப் படுத்திய செந்தில்குமாரை  வஞ்சம் தீர்த்துக் கொள்ள நினைத்ததாகத் தெரிகிறது. 
 
இதற்காக தன் மனைவி, நண்பர்கள் ஆகியோருடன் சேர்ந்துகொண்டு செந்தில்குமார் வீட்டுக்குச் சென்ற சின்ராஜ். அங்கு தன் கையில் வைத்திருந்த கத்தியால் குத்தி அரிவாளால் செந்திலை தாக்கி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
 
இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார் கொலை செய்து தலைமுறைவாக உள்ள சின்ராஜ் அவரது மனைவி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.