1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 4 ஏப்ரல் 2018 (14:22 IST)

நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமியை சீரழித்த நபர்கள் - தஞ்சாவூரில் அதிர்ச்சி

தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த 16 வயது சிறுமியை ஆறு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
டெல்லியில்,  தனது ஆண் நண்பருடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நிர்பயா, பேருந்தினுள் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டதோடு, பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
ஆனாலும், அந்த சம்பவத்திற்கு பின்பும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.
 
அந்நிலையில், தஞ்சாவூரில் பர்மா காலனியில் வசிக்கும் 11ம் வாகுப்பு மாணவி, அவருடன் பள்ளியில் படிக்கும் மணிமாறன் என்ற மாணவருடன் நெய்வாசல் ஆற்றங்கரையோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ரவிச்சந்திரன் என்ற வாலிபர், அந்த மாணவரை விரட்டி அடித்துவிட்டு, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின், செல்போன் மூலம் தகவல் கொடுத்து தனது நண்பனையும் இளவரசனை அழைத்துள்ளார். அங்கு வந்த இளவரசனும், அவரது தம்பியும் அந்த சிறுமியை கற்பழித்துள்ளனர்.
 
இதைவிடக் கொடுமை என்னவெனில், அந்தப் பகுதியில் மணல் அள்ளும் சில இளைஞர்களும் சேர்ந்து அந்த சிறுயை காப்பாற்றாமல் சூறையாடியுள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 
 
அங்கு வந்த போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அவரை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரையும் கைது செய்தனர். 
 
இந்த விவகாரம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.