1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 6 மார்ச் 2018 (18:04 IST)

சென்னை நகைக்கடையில் இளம்பெண் தற்கொலை: அதிர வைக்கும் பின்னணி?

பெரம்பூரில் நகைக்கடையில் வேலை செய்து வந்த 17 வயது இளம்பெண் ஒருவர் கடையின் மூன்றாவது மாடியில் தூக்கில் தொங்கிய சம்பவத்தின் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தூத்துக்குடியை சேர்ந்த இந்த இளம்பெண் குடும்ப சூழ்நிலை காரணமாக பெரம்பூரில் உள்ள நகைக்கடை ஒன்ரில் வேலை செய்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் கடையில் மூன்றாவது தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
 
இதன் பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், கடையில் பணிபுரியும் சூப்பர்வைசர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததினால் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதை காவல் துறைக்கு தெரிவிக்காமல் கடை ஊழியர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பணம் கொடுத்து இதனை சரி செய்துவிடலாம் என எண்ணியுள்ளனர். 
 
ஆனால், இது போலீஸாரின் கவனத்திற்கு வர உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். 17 வயதில் இளம்பெண்ணை வேலைக்கு சேர்த்த கடை உரிமையாளர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.