திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (17:48 IST)

ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (LLR) இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்

two wheeler
ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு இனிமேல் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. 
 
எனவே வாகனம் ஓட்டிப் பழகியவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளது.
 
ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள  வாட்டார அலுவலகத்தில் தான் ஓட்டுநர் பழகுநர்  உரிமம் வழங்கப்பட்டு வந்தது.
 
இந்த நிலையில், இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஓட்டுநர் உரிமத்திற்கு (LLR) விண்ணப்பிக்கலாம் என மாநில போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 
 
''மூலமாகவும் ஓட்டுநர் உரிமத்திற்கு (LLR) விண்ணப்பிக்கலாம். ரூ.60 கட்டணம் செலுத்தி, ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும், ''அனைத்து மோட்டார் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய அனைத்து சேவைகளையும் இ-சேவை மையம் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் அஞ்சல் மூலமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.