வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (17:23 IST)

சாலை விபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் 4 உயிரிழப்பு: நிவாரண நிதி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்..!

Stalin Speech
மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு - இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
 
 
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், சிறுநாகலூர் கிராமம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று 12.3.2024 காலை தொழுப்பேடுவிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் திரு.தனுஷ் (வயது 21) த/பெ.முனியப்பன், திரு.கமலேஷ் (வயது 19) த/பெ.முருகேசன் மற்றும் திரு.மோனிஷ் (வயது 19) த/பெ.சிவகுமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிழிந்தனர். 
 
மேலும். இவ்விபத்தில் திரு.ரவிச்சந்திரன் வயது 20) த/பெ குணசேகரன் என்பவர் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்
 
இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறன். ஈடுசெய்ய முடியாத இந்தப் பேரிழப்பு நம் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது,.
 
Edited by Mahendran