செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 24 மார்ச் 2022 (14:57 IST)

பைக் ரேஸ் சென்ற 3 வாலிபர்கள் கைது - 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் சாலைகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
 
இந்த நிலையில் தென்காசி- சுந்தரபாண்டியபுரம் சாலையில் கீழப்புலியூர் குளத்துக்கரை அருகில் நேற்று மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட தென்காசியைச் சேர்ந்த செய்யது சுலைமான் தாதாபீர் (வயது 21), சேக் மைதீன் (19), முகம்மது (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.