செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

நள்ளிரவில் சினிமா பார்த்து திரும்பிய பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம்: 17 வயது சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

நள்ளிரவில் ஆண் நண்பருடன் சினிமா பார்த்து வீடு திரும்பிய பெண் மருத்துவரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதில் இருவர் 17 வயது சிறுவர்கள் என்றும் வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
வேலூர் காட்பாடி சாலையில் பெண் மருத்துவர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சினிமா பார்த்து திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் ஆண் நண்பரை கட்டி போட்டுவிட்டு பெண் மருத்துவரை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர் 
 
இது குறித்து பெண் மருத்துவர் புகார் அளிக்கவில்லை என்றாலும் காவல்துறையினர் இந்த கொடூர செயலை செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
பெண் மருத்துவரிடம் இருந்து பறித்த ஏடிஎம் அட்டையில் இருந்து பணத்தை எடுத்து உல்லாசமாக செலவு செய்ததை அடுத்தே இந்த கும்பல் பிடிபட்டதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர்