வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மார்ச் 2023 (08:02 IST)

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 100-ஐ நெருங்கிய கொரோனா தொற்று: பொதுமக்கள் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே கொரோனா தொற்று இருந்த நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து 100ஐ நெருங்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது. 
 
மகாராஷ்டிராவில் நேற்று 397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் மீண்டும் படிப்படியாக பரவி வருவதை அடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது என்பதும் அதில் கொரோனா வைரசை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva