வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 மார்ச் 2023 (08:19 IST)

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை: தேதிகளை அறிவித்த மத்திய அரசு..!

தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது 
 
இதன்படி நாடு முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
கொரோனா இன்புளுயன்ஸா காய்ச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் கொரோனா ஒத்திகைக்கு அனைத்து பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
 
Edited by Siva