வளிமண்டல மேலடுக்கு சுழற்சி... 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!
தமிழக பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதை அடுத்து, ஐந்து மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வடமேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளிலும் புதுவையிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று ஒரே நாளில் மதுரையில் மிக அதிகமான மழை பெய்ததால், மதுரை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்று கூறி, வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நவம்பர் 1 வரை தமிழகத்தில் உள்ள சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran