கனமழை காரணமாக தரையிறங்காமல் 40 நிமிடங்கள் வானில் வட்டம் அடித்த விமானம்!
கனமழை காரணமாக அரை மணி நேரமாக வானில் வட்டமடித்து பின் மதுரை வந்த இண்டிகோ விமானம் 9 20 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது .
மேலும் இரவு 8.40 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை வரும் இண்டிகோ விமானம் இரவு 9.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
40 நிமிடங்களுக்கு மேல் கனமழை காரணமாக வானில் வட்டமடித்த விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்கியது
இரண்டு விமானங்களும் கன மழை காரணமாக சுமார் 40 நிமிடம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பாக காணப்பட்டது