திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (23:06 IST)

கருவூரில் சரஸ்வதி ஹயக்கிரீவர் வழிபாடு!

karuvur
கருவூரில் சரஸ்வதி ஹயக்கிரீவர் வழிபாட்டையொட்டி  நோட்டு - பேனா - பென்சில் வழங்கப்பட்டது.
 
கருவூர் தொழிற்பேட்டை ஆசிரியர் காலனியில் அமைந்துள்ள கல்யாண சுப்ரமண்யர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி மற்றும் ஹயக்கிரீவருக்கு சஷ்டிக்குழுவால் இன்றுஹோமம் யாகம், அபிஷேகம் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
 
கௌரவத் தலைவர் மேலை பழநியப்பன் கல்விச் சிறப்பும் கலைமகள் அருளும் என்கிற தலைப்பில்உரையாற்றினார்.
 
கா.பாலமுருகன், தாத்தையங்கார்பேட்டை சுவாமிகள், மருது டாக்டர் கார்த்திகேயன், கார்த்தி, சேட்டு, தர்மர் வெங்கடேசன். தேங்காய் சரவணன் சண்முகநாதன் உட்பட திரளானவர்கள் பங்குபெற்றனர்.
 
நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் நோட்டு எழுதுபொருள் - படம் பெற்றனர். மதிய அன்னதானமும் நடைபெற்றது.

Edited by Sinoj